SSC MTS Recruitment Notification 2023:11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு அழைப்பு...!

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகளில், காலியாக உள்ள 11,409 தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

11 ஆயிரம் காலிப் பணியிடங்கள்?

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.02.2023

பணியிடங்கள் விவரங்கள்

v பல்துறை சார் பணியாளர்கள் (Multi-tasking non technical staff) - 10,880 (தோராயமாக)

v ஹவில்தார் (Havaldar)- 529 பணியிடங்கள்

விண்ணப்பிக்கும் முறை

தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், பிப்.,17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

11 ஆயிரத்து 409 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 18 ஆம் தேதி தொடங்கி உள்ளது.

தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 19ஆம் தேதி இரவு 11 மணி வரை கட்டணம் செலுத்தலாம்.

நேரடியாக சலான் முறையில் கட்டணம் செலுத்த பிப்ரவரி 20 கடைசி ஆகும்.

விண்ணப்பங்களில் திருத்தங்களை பிப்ரவரி 23, 24ஆம் தேதிகளில் மேற்கொள்ள நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெறும்.

கடந்தாண்டு இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், விரிவாக எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

ஆனால், முதல்கட்டமாக கணினி வழியில் நடந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது.

13 மொழிகளுக்கு தேர்வெழுத வாய்ப்பு

இந்த நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேர்வு முறை

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும்.

இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது.

ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும்.

how to apply ssc exam, how to prepare ssc exam

தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.

முகப்புப் பக்கத்தில் Apply என்பதை 'க்ளிக்' செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.

அத்திரையில் தெரியும் "Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022" என்ற பக்கத்தினுள் சொடுக்கி, விண்ணப்பம் செய்ய வேண்டும்.

லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!

https://ssc.nic.in/

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf

காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Tentative _Vacancies_MTS_2022_20012023.pdf

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for 11,000 vacant posts through online portal.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X