டெல்லி காவல்துறை, மத்திய ஆயுத காவல் படையில் காலியாக உள்ள 1876 பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய, ஆகஸ்ட் 15 ஆம் தேதி கடைசி நாளாகும்.
நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.08.2023
பணியிடங்கள் விவரங்கள்
v உதவி ஆய்வாளர் டெல்லி காவல் துறை (ஆண்கள்) - 109
v உதவி ஆய்வாளர் டெல்லி காவல் துறை (பெண்கள்) - 53
v உதவி ஆய்வாளர் மத்திய ஆயுத காவல் படை - 1714
மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை : 1876

விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆயிரத்து 1876 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு ஜூலை 27 ஆம் தேதி தொடங்கி உள்ளது.
தேர்வுக்கு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி இரவு 11 மணி வரை, கட்டணம் செலுத்தவும், விண்ணப்பங்களை திருத்தவும் அனுமதிக்கப்படுகிறது.
கணினி வழியிலான தேர்வு அக்டோபர்மாதம் நடைபெறும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.08.2023 அன்றைய நாளின்படி, குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியம்.
வயது தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
15 மொழிகளுக்கு தேர்வெழுத வாய்ப்பு
எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை, தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தத் தேர்வின் மூலம் ஆயிரத்து 876 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேர்வு முறை
இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும். எதிர்மறை மதிப்பெண்கள் உண்டு
உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதித் தேர்வு ( Physical Efficiency Test ), உடல் தர நிலை தேர்வும் (Physical Standard Test) நடத்தப்படும்.
கூடுதல் விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
how to apply ssc exam, how to prepare ssc exam
தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.
முகப்புப் பக்கத்தில் Apply என்பதை 'க்ளிக்' செய்யவும். செய்து, Others பக்கத்தை க்ளிக் செய்யவும்.
அத்திரையில் தெரியும் "Notice of Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination,2023 " என்ற பக்கத்தினுள் சொடுக்கி, விண்ணப்பம் செய்ய வேண்டும்.
லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.
ப்ளீஸ் மறக்காம ஒரு முறை படிக்கவும்...!
காலிப் பணியிடங்கள் மாநிலம், பிரிவு விவரம் அறிய...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CPO-SI-2023_22072023.pdf


Click it and Unblock the Notifications












