நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட துணை அலுவலகங்கள் உட்பட மத்திய அரசின் அமைச்சகங்களில், காலியாக உள்ள 300க்கும் மேற்பட்ட மொழிப்பெயர்ப்பாளர்கள் பணியிடங்களுக்கு, தேசிய அளவிலான தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு, செப்டம்பர் 12ஆம் தேதி ஆகும்.
நிர்வாகம்: பணியாளர் தேர்வாணைம்(எஸ்.எஸ்.சி.,)
மேலாண்மை: மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.09.2023

பணியிடங்கள் விவரங்கள்
ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அலுவலர் (Secretariat Official Language Service CSOLS), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அலுவலர் (Armed Forces Headquaters), ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் (JHT), ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் (JT) பல்வேறு மத்திய அமைச்சகங்கள்/ அமைப்புகள்/ துறைகள், சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் (SHT)/ சீனியர் மொழிபெயர்ப்பாளர் என, 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணியிடங்கள் எண்ணிக்கை: 307
விண்ணப்பிக்கும் முறை
தேர்வுக்கு விண்ணப்பிக்க, தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள், செப்.,12க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
307 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு ஆக.,28 ஆம் தேதி தொடங்கி உள்ளது.
தேர்வுக்கு செப்.12ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த செப்.12 கடைசி ஆகும்.
விண்ணப்பங்களில் திருத்தங்களை செப்.13,14 ஆம் தேதிகளில் மேற்கொள்ள நேரம் வழங்கப்பட்டுள்ளது. கணினி வழியிலான தேர்வு தோராயமாக அக்டோபர் மாதம் நடைபெறும்.
கல்வித் தகுதி
காலிப் பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரியில் இருந்து பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொழிபெயர்ப்பு செய்ய தெரிந்திருக்க வேண்டும். மொழிப் பாடங்களில் பட்டம் பெற்றிருப்பது அவசியம்
தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். கணிணி முறையில் தேர்வு நடைபெறும். தவறான விடைகளுக்கு, 'நெகட்டிவ்' மதிப்பெண்கள் உண்டு.
ஊதிய விவரம்
Ø ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி : ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
Ø ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் அதிகாரி ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
Ø ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் - ரூ.35,400 - ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
Ø சீனியர் இந்தி மொழிபெயர்பாளர் - ரூ.44,900 - 1,42,400 சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு
விண்ணப்பிக்க, 01.08.2023 அன்று 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. கூடுதல் விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விதி விலக்கு உண்டு.
முழு விவரங்களை அறிந்து கொள்ள https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/FINAL_NOTICE_JHT_2023_22082023.pdf -
என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு, சலுகைகள், ஊதியம் ஆகியவை மாறுபடுகிறது. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இடம்பெற்ற விபரங்களை விரிவாக படித்து, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சலுகை குறித்து அறிய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
how to apply ssc exam, how to prepare ssc exam
தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை 'க்ளிக்' செய்யவும்.
முகப்புப் பக்கத்தில் Latest news பகுதியில் உள்ள அறிவிப்பை 'க்ளிக்' செய்யவும்.
அத்திரையில் பணி வாய்ப்பு பற்றிய முழு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அறியலாம்.
முகப்பு திரையில் லாகின், பாஸ்வேர்டை உள்ளிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய கடைசி நேரம், தேர்வு நடக்கும் நாள், தேர்வுக்கான பாடத்திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.


Click it and Unblock the Notifications












