மத்திய அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (எஸ்.எஸ்.சி) அமைப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு ssc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.
இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) என்பது இந்திய அரசுப் பணிக்குத் தேவையானவர்களைத் தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பட்ட ஒரு மத்திய அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இது ஒரு தலைவரையும், இரண்டு செயலாளர்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனம் இந்திய அரசின் கெஜட் பதிவில்லாத பிரிவு பி மற்றும் பிரிவு சி பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிற்து.

மேலும் இது, மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் இந்தத் தேர்வாணையம் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது எஸ்எஸ்சி சார்பில் மத்திய அரசு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மத்திய அரசு பணிகளான லோயர் டிவிஷன் கிளார்க் / ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவில் உத்தேசமாக 3172 இடங்கள் காலியாக உள்ளன.
எஸ்எஸ்சி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
எஸ்எஸ்சி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 1.8.2024 அடிப்படையில் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எஸ்எஸ்சி பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு மையம்: இந்தப் பணியிடத் தேர்வுகளுக்கான மையங்களாக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார் ஆகிய நகரங்கள் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 100 செலுத்தவேண்டும்.பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி.,பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்: எஸ்எஸ்சி பணியிடங்களுக்கு வரும் 7.5.2024-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு ssc.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு அறியலாம்.


Click it and Unblock the Notifications












