மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தபால் உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டாப் செயக்சன் கமிஷன் மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள்
பணி : கீழ்நிலை உதவியாளர் மற்றும் இளநிலை செயலக உதவியாளர்
ஊதியம் : மாதம் ரூ.5200 முதல் ரூ.20200 வரை, தர ஊதியம் ரூ.1900
பணி : அஞ்சல் உதவியாளர் மற்றும் வரிசையாக்க உதவியாளர்
ஊதியம் : மாதம் ரூ.5200 முதல் ரூ.20,200 வரையில், தர ஊதியம் ரூ. 2400
பணி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்
ஊதியம் : மாதம் ரூ.5200 முதல் ரூ.20,200 வரையில், தர ஊதியம் ரூ.2400
பணி : டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கிரேடு ஏ
ஊதியம் : மாதம் ரூ.5,200 முதல் ரூ. 20,200 வரையில், தர ஊதியம் ரூ.2400
கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : கணினித் தேர்வு, தட்டச்சு தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100
- அனைத்துப் பிரிவைச் சேர்ந்த பெண்கள், முன்னாள் படைவீரர்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை : https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பார்ட் 1, பார்ட் 2 என இருநிலைகளில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இறுதியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 2 பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
கணினி எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி :
முதல்நிலை தேர்வு : 01.06.2019 முதல் 26.06.2019 வரை நடைபெற உள்ளது.
இரண்டாம் நிலை தேர்வு 29.09.2019 நடைபெறுகிறது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_chsl_05032019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












