இந்திய ராணுவத்தின் துணை ராணுவப் படைகளில் ஒன்றான சாஸ்த்ரா சீமான் பால் படைப்பிரிவில் காலியாக உள்ள Specialist மற்றும் General Duty Medical Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 51 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.85 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சாஸ்த்ரா சீமான் பால் (SSB)
மேலாண்மை : மத்திய உள்துறை அமைச்சகம்
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Specialist - 07
- General Duty Medical Officer (GDMO) - 44
மொத்த காலியிடங்கள் : 51
கல்வித் தகுதி :
மத்திய அல்லது மாநில அரசு கல்வித்துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் முதல் நிலைப் பட்டம், டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.75,000 முதல் ரூ.85,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 26.10.2021 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Government of India, Ministry of Home Affairs, Directorate General, Sashastra Seema Bal, East Block-V, R.K.Puram, New Delhi - 110066
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ssbrectt.gov.in என்னும் இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












