கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பயிற்சி ஆய்வாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா
மேலாண்மை : மத்திய அரசு
பணி : பயிற்சி ஆய்வாளர் (வேதியியல்)
காலியிடங்கள்: 12
பணி : பயிற்சி ஆய்வாளர் (நுண்ணுயிரியல்)
காலியிடங்கள்: 03
கல்வித் தகுதி : வேதியியல், உணவு வேதியியல், அப்ளைடு வேதியியல், பகுப்பாய்வு வேதியியல், தொழிற்துறை வேதியியல், உணவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
உதவித் தொகை : ரூ.18,000
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வின்போது தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14.03.2019 காலை 10 மணி
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Spices Board, Sugandha Bhavan, Palarivattom, NH By pass, Kochi, Kerala - 682025 (Ph No. 0484-2333610).
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.indianspices.com/opportunities/walk-test-selection-trainees-quality-evaluation-laboratory-spices-board-kochi-1 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












