தெற்கு ரயில்வேயில் 2860 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ண்ணப்பங்களை ்அனுப்ப https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த தென்னக ரயில்வேயில்தான் தற்போது 2860 அப்ரண்டிஸ் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://sr.indianrailways.gov.in/ மூலம் விண்ணப்பங்களை 29.01.2024 காலை 10.00 மணிக்கு தொடங்கி 28.02.2024 மாலை 05.00 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
தென்னக ரயில்வேயில் (Southern Railway) அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
பிட்டர் (Fitter): குறைந்தட்சம் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வெல்டர் (Welder -(Gas & Electric): குறைந்தட்சம் 50 % மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள்: 50% மொத்த மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐடிை பிரிவு (EX-ITI Category):
அறிவியல் மற்றும் கணிதத்துடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு கால ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தென்னக ரயில்வேயில் (Southern Railway) அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்
தேர்வு செயல் முறை:
மெரிட், சான்றிதழ் சரிபார்ப்பு (Merit List, Certificate Verification) முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிடி, பெண்களுக்கு (SC/ST/PwBD/பெண்கள்) கட்டணம் கிடையாது
மற்ற விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் 29/01/2024 முதல் 28/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இணையதள முகவரி:
விண்ணப்பங்களை ்அனுப்ப https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
விளம்பர டவுன்லோடு:
பணியிட அறிவிப்பு தொடர்பான விளம்பரத்தை டவுன்லோடு செய்ய https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












