மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான தென்னிந்திய வங்கியில் (South Indian) காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.64 ஆயிரம் ஊதியம் நிரணயம் செய்யப்பட்டுள்ள இப்பணிடயத்திற்கு பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. வங்கி வேலைக்கு காத்திருப்பவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சவுத் இந்தியன் வங்கி (South Indian Bank)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Probationary Officers in Scale I Cadre
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
- பட்டப் படிப்பை குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், ஏதேனும் ஓர் வணிக வங்கி, நகர்புற கூட்டுறவு வங்கிகளில் குறைந்தது 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : இப்பணியிடத்திற்கு Scale I (IBA package)-ன் படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரூ.36,000 - 1,490/7 - 46,430 - 1,740/2 - 49,910 - 1,990/7 - 63,840 ஊதியம் நீர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://recruit.southindianbank.com/RDC/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் - 01.09.2021
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 08.09.2021
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.southindianbank.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












