5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

தமிழக அரசிற்கு உட்பட்டு சிவகங்கையில் செயல்பட்டு வரும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு சிவகங்கையில் செயல்பட்டு வரும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 60 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : வருவாய்த் துறை, சிவகங்கை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 60

பணி : அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி :

5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 20.11.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Sivaganga Revenue Department Recruitment 2020, Apply for Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X