தமிழ்நாடு அரசு கூட்டுறவு சொசைட்டிக்கு உட்பட்ட தென்னிந்திய பன் மாநில விவசாய கூட்டுறவு சங்கம் லிமிடெட் எனும் South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO) துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : South India Multi-State agriculture co-operative Society Ltd., (SIMCO)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அலுவலக உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள்
மொத்த காலிப் பணியிடங்கள் : 48
கல்வித் தகுதி :
அலுவலக உதவியாளர் - 10-ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விற்பனையாளர் - 12-வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேற்பார்வையாளர் - ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கணக்காளர் - B.Com, M.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கிளை மேலாளர் - ஏதேனும் ஓர் தறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் :
- அலுவலக உதவியாளர் - ரூ.5,200 முதல் ரூ.20,200
- விற்பனையாளர் - ரூ.6,200 முதல் ரூ.26,200
- மேற்பார்வையாளர்கள் - ரூ.6,200 முதல் ரூ.28,200
- கணக்காளர் - ரூ.7,200 முதல் ரூ.30,200
- கிளை மேலாளர் - ரூ.8,200 முதல் ரூ.32,200
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://simcoagri.com/our-career.html என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 28.02.2022 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.simcoagri.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












