மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள Research Associate பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.36 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்ட இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் எம்.டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முகவரியில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Research Associate
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் எம்.டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மாதம் ரூ.36,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.siddhacouncil.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 27.11.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Research Officer (S) S II & I/c Central Council for Research in Siddha, Puducherry, Chellaperumal Street, Kuyavarpalayam, Puducherry -605013.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.siddhacouncil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.