சிட்பி என்று அழைக்கப்படும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) தற்போது சீனியர் இன்வெஸ்ட்மெண்ட் அசோசியேட் (Senior Investment Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களை அறிய https://www.sidbi.in/en என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.

சிட்பி என்று அழைக்கப்படும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) என்பது இந்தியாவில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன நிதி நிறுவனங்களின் ஒட்டுமொத்த உரிமம் மற்றும் ஒழுங்குமுறைக்கான உச்ச ஒழுங்குமுறை அமைப்பாகும். இது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறது.நாடு முழுவதும் அதன் அலுவலகங்களையும் கொண்டுள்ளது.ஐடிபிஐ-IDBI வங்கியின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாக இந்திய அரசால் ஏப்ரல் 2, 1990 அன்று சிட்பி வங்கி SIDBI நிறுவப்பட்டது.
இதன் நோக்கம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மறுநிதியளிப்பு வசதிகளை வழங்குவது மற்றும் தொழில்களுக்கு காலக் கடன் மற்றும் செயல்பாட்டு மூலதன நிதியில் ஈடுபடுவதாகும்.மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) துறையில் முதன்மை நிதி நிறுவனமாகவும் செயல்படுகிறது.இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்களின் செயல்பாடுகளையும் சிட்பி ஒருங்கிணைக்கிறது. இது 1989 ஆம் ஆண்டு பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில்தான் (SIDBI) தற்போது சீனியர் இன்வெஸ்ட்மெண்ட் அசோசியேட் (Senior Investment Associate) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீனியர் இன்வெஸ்ட்மெண்ட் அசோசியேட் (Senior Investment Associate) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சீனியர் இன்வெஸ்ட்மெண்ட் அசோசியேட் (Senior Investment Associate) பணியிடங்களுக்கான கல்வி தகுதி:
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சீனியர் இன்வெஸ்ட்மெண்ட் அசோசியேட் (Senior Investment Associate) பணியிடங்களுக்கான தேர்வு செயல் முறை:
முதன்மை தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு (Preliminary Exam,
Group Discussion, Personal Interview) அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வம் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 12.1.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிட விளம்பரம் தொடர்பான அறிவிப்பை https://www.sidbi.in/en/careers/recruitment-for-the-post-of-senior-investment-associate என்ற இணையதள முகவரியில் காணலாம்.
கூடுதல் தகவல்களை அறிய https://www.sidbi.in/en என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












