தமிழ்நாட்டில் காலியாக உள்ள சீனியர் ரெசிடெண்ட் (Senior Resident) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் தமிழ்நாடு (ESIC TN) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணிக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுக் கழகமானது சுருக்கமாக இஎஸ்ஐசி என்று அழைக்கப்படுகிறது. இது) மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள இரண்டு முக்கிய சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும்,
மற்றொரு சமூகப் பாதுகாப்பு அமைப்பாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு உள்ளது.
இஎஸ்ஐ சட்டம் 1948-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நிதியானது ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தால் (ESIC) நிர்வகிக்கப்படுகிறது.

இந்த ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம்- தமிழ்நாட்டில் ( ESIC TN) மொத்தம் 29 சீனியர் ரெசிடெண்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதற்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் MD/ MS/ DNB, M.Sc, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பாக பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழக தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 14-06-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகும்.
இந்த சீனியர் ரெசிடெண்ட் பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வருக்கு மாதம் ரூ. 67,700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூடி (SC/ ST/ PWD), முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது
மற்றவர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500/ செலுத்தவேண்டும்.
இந்தப் பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது முழு விவரம், தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
முகவரி
Office of Dean, ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.esic.gov.in/attachments/recruitmentfile/875be0485b8d3532018312c5f2343cc0.pdf என்ற இணையதள லிங்க்கைக் காணலாம்.


Click it and Unblock the Notifications












