நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Junior Associate பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5454 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையிவ் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (SBI)
மொத்த காலியிடங்கள் : 5454
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 475 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பணி : Junior Associate
கல்வித் தகுதி:
மேற்கண்ட பணியிடத்திற்கு ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.04.2021 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920/ என மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட எஸ்பிஐ வங்கியின் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.sbi.co.in/web/careers/current-openings எனும் இணைய முகவரியின் மூலம் 17.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
- எஸ்பிஐ பணிக்கு ஆன்லைன் வழியில் விண்ணப்பிப்போர் கட்டணமாக ரூ.750 கட்டணமாக செலுத்த வேண்டும்.
- எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவு விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.sbi.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












