மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 16 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி 16ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களும், தகுதிகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

நிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 16
பணி மற்றும் பணியிட விபரம் :
- இணை மேலாளர் (கடன் அட்டை பிரிவு) கிரேடு II - 01
- இணை மேலாளர் (அரசு இணையச் சந்தை) கிரேடு II - 01
ஊதியம் : மாதம் ரூ.31705-1145/1-32850-1310/10-45950
வயதுவரம்பு : 27 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மேலாளர் (கடன் அட்டைச் சந்தைப்படுத்துதல்) கிரேடு III - 01
- மேலாளர் (ஸ்மார்ட் சிட்டி திட்டம்) கிரேடு III - 03
- மேலாளர் (போக்குவரத்து / மாநில சாலை போக்குவரத்துக் கழகம்) கிரேடு III - 03
- மேலாளர் (யுபிஐ மற்றும் அக்ரிகேடர்) கிரேடு III - 07
ஊதியம் : மாதம் ரூ.42020-1310/5-48570-1460/2-51490
வயதுவரம்பு :
- 28 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தகுதி : 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்பிஏ, பிஜிடிஎம், பிஜிடிபிஎம் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு முறை : தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம் :
- ரூ.600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 11.02.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/2101191912-ADV-ENG.pdf அல்லது www.sbi.co.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












