விண்வெளித்துறை வித்தகர் பெயரை கொண்ட மையத்தில் ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு

இந்திய விண்வெளித்துறையின் வித்தகர் சதீஷ் தவான். விண்வெளி துறையில் அவர் ஆற்றிய பணிகளை கெளரவிக்கும் விதமாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு, சதீஷ் தவான் விண்வெளி மையம் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அத்தகைய நிறுவனத்தில் காலியாக உள்ள
Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

நிர்வாகம் : சதீஷ் தவான் விண்வெளி மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பதவிகள் விவரம் :

பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்(Trained Graduate Teacher)
தொடக்க கல்வி ஆசிரியர்)Primary Teacher)
முதுநிலை ஆசிரியர்(Post Graduate Teacher)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 28.08.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 19

ஊதியம்

பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.35,400 முதல் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, B.Ed, Any Degree, Graduation, M.Sc, Masters Degree, Post Graduation என, பணிக்கு தேவையான பட்டப்படிப்பில், ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும், அதிகபட்ச வயது 40 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், வயது வரம்பு தளர்வு, இன்ன பிற சலுகைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று, பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 28.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை மறக்காதீங்க.

ரொம்ப முக்கியம்

நாளை(ஆகஸ்ட்.28) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். ஆன்லைன் என்பதால் உங்களுக்கு நேரம் இருக்கு... உடனே வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு

தேர்வு முறை

நேர்காணல் வாயிலாக, விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒரு முறை பாருங்கள்.

https://www.shar.gov.in/sdscshar/index.jsp

https://www.isro.gov.in/career?field_isro_centrevalue=sdsc

https://www.isro.gov.in/sites/default/files/final_teacher_advertisement.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Eligible and interested candidates can apply for 19 teaching posts vacant in Satish Dhawan Space Center, Sriharikota,
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+