மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் (SAIL) காலியாக உள்ள GDMO மற்றும் Specialists பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.20 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- GDMO - 16
- Specialists - 08
மொத்த காலிப் பணியிடம் : 24
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற் கல்வி நிறுவனத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் MBBS படித்திருக்க வேண்டும்.
மேலும், சிறப்பு பிரிவில் PG Diploma in the Speciality அல்லது PG Degree in the Speciality தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 69 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- GDMO - MBBS பணிக்கு ரூ.70,000
- Specialist - MBBS with PG Diploma in the speciality பணிக்கு ரூ.90,000
- Specialist - MBBS with PG Degree in the Speciality பணிக்கு ரூ.1,20,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : General Duty Medical Officer
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sail.co.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of ED(M&HS), DSP Main Hospital Durgapur- 713205, Paschim Bardhaman.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sailcareers.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












