செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடம் ரெடி...!!!

செயில் என்று அழைக்கப்படும் (Steel Authority of India Limited -SAIL )நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம், கூடுதல் விவரங்களுக்கு https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed Advt.-SRD.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

செய்ல் (SAIL) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது மத்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். ரூ. 48,681 கோடி ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

மத்திய அரசு மூலம் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனமாகவும் செயில் உள்ளது. பிலாய், ரூர்கேலா, துர்காபூர், பொகாரோ, பர்ன்பூர் ஆகிய 5 நகரங்களில் செயில் உருக்காலை பிரமாண்டமாக அமைந்துள்ளது. மேலும், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனமாக புகழ் பெற்றுள்ளது.

செயில் நிறுவனத்திடம் உள்ள பெரிய ஆலைகளில் முக்கியமானது ரூர்கேலா இரும்பு உருக்காலை ஆகும்.
ரூர்கேலா இரும்பு உருக்காலை (RSP), ஒடிசா மாநிலம், ரூர்கேலாவில் அமைந்துள்ளது.இது 1959-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி மேற்கு ஜெர்மன் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் பழங்குடியின மக்களிடமிருந்து பெறப்பட்ட சுமார் 19,000 ஏக்கர் நிலத்தில் நிறுவப்பட்டது.

செயில் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணியிடம் ரெடி...!!!

2010-12 விரிவாக்கத்துக்குப் பின்னர், RSP தற்போது 4.5 MTPA (ஆண்டுக்கு மில்லியன் டன்) ஹாட் மெட்டல், 4.2 MTPA கச்சா ஸ்டீல் மற்றும் 3.9 MTPA விற்பனையான ஸ்டீல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. 19,134 பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

இந்த பெருமைமிகு செயில் (Steel Authority of India Limited -SAIL )நிறுவனத்தில்தான் தற்போது மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது.

இங்கு மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்கள் மொத்தம் 92 காலியாக உள்ளன.மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்க ளுக்கான கல்வித்தகுதி:அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு (Engineering Degree )தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்க ளுக்கான வயதுத்தகுதி:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 மற்றும் 45 (Departmental Candidate) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடலாம்.

மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்க ளுக்கு சம்பள விவரம்:தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
மேனேஜ்மெண்ட் டிரெய்னி (Management Trainees) பணியிடங்க ளுக்கு தேர்வு செய்யும் முறைதகுதியான விண்ணப்பதாரர்கள் கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு (Computer Based Exam) மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.12.2023-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:கூடுதல் விவரங்களுக்கு https://d1cmkr5tdoeyjk.cloudfront.net/sail/pdf/Detailed Advt.-SRD.pdf என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Steel Authority of India Limited (SAIL) has released the recruitment notification for 92 management trainee positions in Employment News (December 23-29), 2023. The application process for recruitment to the above positions starts on December 11 on the official website, and the last date to submit the online application form is December 31, 2023. Eligible and interested candidates can apply for the posts after visiting the official website - sail.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+