மத்திய அரசின் கீழ் செயல்படும் சாகித்ய அகாடமியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். கூடுதல் விவரங்களுக்கு sahitya-akademi.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.
சாகித்திய அகாடமி (Sahitya Akademi) என்பது இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கான அமைப்பாகும். இந்நிறுவனம் இந்திய மொழிகளின் இலக்கியமும், இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசின் ஆதரவுடன், தன்னாட்சி அமைப்பாக 12 மார்ச் 1954 அன்று, ரவீந்திர பவன், புதுடெல்லியில் தொடங்கப்பட்டது.
வெளிநாட்டு மற்றும் இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த இலக்கியப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, இந்திய மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரொக்கப் பரிசுடன் கூடிய விருது அளித்து ஊக்கப்படுத்துவது, சிறுவர் இலக்கியங்களையும், சிறுபான்மையினர் பேசும் மொழிகளை ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்து வருகிறது சாகித்ய அகாடமி நிறுவனம். சாகித்ய அகாதமியின் மண்டல அலுவலகங்கள், பெங்களூரு, சென்னை, மும்பை மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.

மத்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.
இந்த பெருமைவாய்ந்த சாகித்ய அகாடமியில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பப்ளிகேஷன் அசிஸ்டென்ட் பிரிவில் 1, விற்பனை உதவியாளர் பிரிவில் 2, தொழில்நுட்ப உதவியாளர் பிரிவில் 1, பிழை திருத்துபவர் பிரிவில் 1, டெலிபோன் ஆப்பரேட்டர் பிரிவில் 1, ஜூனியர் கிளார்க் பிரிவில் 2, எம்.டி.எஸ்.பிரிவில் 2 என மொத்தம் 10 இடங்கள் காலியாக உள்ளன.
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:
எம்.டி.எஸ்., பணிக்கு பத்தாம் வகுப்பு, கிளார்க் பணிக்கு பிளஸ் 2, மற்ற பணிக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:
4.2.2024 அடிப்படையில் விற்பனை உதவியாளர் 40, பப்ளிகேஷன் அசிஸ்டென்ட், தொழில்நுட்ப உதவியாளர் 35, மற்ற பணிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
சாகித்ய அகாடமி பணியிடங்களுக்கு இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi-110001
விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள் 5.2.2024 ஆகும்.
இணையதள முகவரி:
பணியிடங்கள், கல்வித்தகுதி, வயதுச் சலுகை உள்பட பல்வேறு கூடுதல் விவரங்களுக்கு sahitya-akademi.gov.in என்ற இணையதள முகவரியைக் கிளிச் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












