மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி துறையின் கீழ் இந்தூரில் செயல்பட்டு வரும் ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜியில் காலியாக உள்ள தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : ராஜா ராமன்னா சென்டர் ஃபார் அட்வாண்ஸ்டு டெக்னாலஜி
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தொழில் பழகுநர் பயிற்சி
காலியிடங்கள் : 40
கல்வித் தகுதி :
- 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையத் துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
- 2017க்கு பின்னர் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
உதவித்தொகை : மாதம் ரூ.7,500 வழங்கப்படும்.
தேர்வு முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் www.rrcat.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 பிப்ரவரி 28
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.rrcat.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












