மத்திய அரசின் இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.80 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES)
பணி : Assistant Manager, Engineer, Manager
காலிப் பணியிடங்கள் : 10
கல்வித் தகுதி :
Assistant Manager - (SAP PS, SAP SD, SAP MM), Engineer (Dot Net, JAVA) - BE/B.Tech/B.Sc (Engg) Degree in IT/ Computer Science & Engg/ Computer Science/ Computer Engg/ Electronics & Communication Engg/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (Social) மற்றும் Manager (Social) - Sociology, Social Welfare, Social Work, Social Science, Urban Planning பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Manager (Environment) - BE, B.Tech, B.Sc (Engineering) Degree in Civil Engineering, Environment Engineering மற்றும் Master's Degree in Environment Engineering, Environment Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
Assistant Manager (SAP PS, SAP SD, SAP MM) - 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Engineer (Dot Net, JAVA) - 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Manager (Social) - 36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
Assistant Manager (Social, Environment) - 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.40,000 முதல் ரூ.1,80,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு :
Assistant Manager - இங்கே கிளிக் செய்யவும்.
Manager - இங்கே கிளிக் செய்யவும்.
Assistant Manager (Social, Environment) - இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 16.10.2021 தேதிக்குள் https://www.rites.com/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.600
- எஸ்.சி, எஸ்டி உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Off-line/ On-line) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது www.rites.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












