மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் நிறுவனத்தில் (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 146 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் (RITES)
பணி : அப்ரண்டிஸ்
காலிப் பணியிடங்கள் : 146
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:
- Graduate Apprentice - 96
- Diploma Apprentice - 15
- Trade Apprentice - 35
கல்வித் தகுதி :
Graduate Apprentice - பிஇ, பி.டெக், பிஏ, பிபிஏ, பி.காம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Diploma Apprentice - பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Trade Apprentices - பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Graduate Apprentice - ரூ.14,000
- Diploma Apprentice - ரூ.12,000
- Trade Apprentice - ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.rites.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.05.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்களில் Merit List அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் அல்லது www.rites.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












