'மினி ரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ரைட்ஸ்' நிறுவனத்தில், காலியாக உள்ள திட்ட இயக்குனர், திட்ட குழு தலைவர் ஆகிய பணியிடங்களுக்கு, செப்டம்பர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களில் தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர்.
நிர்வாகம் : ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (Rail India Technical and Economic Service Limited)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
v Project Director
v Project Team Leader
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.09.2023
கல்வி தகுதி
சிவில் துறையில் பொறியியல் கல்வி தகுதியை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், படித்திருக்க வேண்டும். கூடுதல் விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.
ஊதியம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் நிறுவன விதிகளுக்கு உட்பட்டு மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
வயது வரம்பு
அக்டோபர் 1 அன்று, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 63 வயதை கடந்திருக்கக் கூடாது.
தேர்வு முறை:
பணி அனுபவம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/Career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான கல்வி, பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடக்கும் தேதி அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களுடன் கோரப்படும் சான்றிதழ்களை சுய கையொப்பமிட்டு, அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். யார், யார் தகுதியானவர்கள் என்பதை, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அது குறித்து அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://recruit.rites.com/frmRegistration.aspx
மறக்காதீங்க... உடனே அப்ளை செய்யுங்க...!


Click it and Unblock the Notifications












