'மினி ரத்னா' அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'ரைட்ஸ்' நிறுவனத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் டிசைன் இன்ஜினியர் பணியிடங்களுக்கு, செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களில் தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1.20 லட்சம் வரை பெற முடியும்.
நிர்வாகம் : ரயில் இந்தியா டெக்னிக்கல் அண்ட் எகனாமிக் சர்வீஸ் லிமிடெட் (Rail India Technical and Economic Service Limited)
மேலாண்மை : மத்திய அரசு
காலிப் பணியிட எண்ணிக்கை : 78

பணி விவரம்
Junior Design Engineer
CAD Draughtsman
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.09.2023
கல்வி தகுதி
ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் படித்த பட்டதாரிகள் பதவிக்கு ஏற்ற பாடங்களை விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், படித்திருக்க வேண்டும். கூடுதல் விபரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.
ஊதியம்
Junior Design Engineer
Rs.30,000-1,20,000
CAD Draughtsman
Rs.20,000-66,000
வயது வரம்பு:
செப்டம்பர் 1 அன்று, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 40 வயதை கடந்திருக்கக் கூடாது.
தேர்வு முறை
பணி அனுபவம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம்:
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.rites.com/Career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான கல்வி, பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் 5 ஆம் தேதி முதல் நடக்கும். கூடுதல் விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அது குறித்து அறிந்து கொள்ள கீழே உள்ள அறிவிப்பை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://recruit.rites.com/frmRegistration.aspx
காலிப்பணியிடங்களுக்கான நேர்காணல் செப். 4 முதல் நடந்து வருகிறது. நேர்காணலில் செப்.11 ஆம் தேதிக்கு பின் பங்கேற்க முடியாது. மறக்காதீங்க... யூத்ஸ்...!


Click it and Unblock the Notifications












