ஐசிஎம்ஆர்-ல் வேலை செய்ய ஆசையா இருக்கா

புராஜக்ட் ரிசர்ச் சயின்ஸ்டிஸ்ட், கன்சல்டன்ட் ஆகிய பணியிடங்கள் (project Research Scientist I, Consultant (IT) ) பணிகளுக்கு என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அல்லது இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் அல்லது இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (Indian Council of Medical Research - ICMR) என்பது உயிரியல் மருத்துவ ஆய்விற்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான உச்சபட்ச அதிகாரம் கொண்ட இந்திய நிறுவனம் ஆகும். இது உலகில் உள்ள பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சிக் குழுக்களில் ஒன்றாகும். இந்த சபைக்கு தேவையான நிதியை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (இந்தியா)சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வழங்குகிறது.

ஐசிஎம்ஆர்-ல் வேலை செய்ய ஆசையா இருக்கா

1911 ஆம் ஆண்டில், மத்திய அரசால் இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (ஐஆர்ஏஏ) என்ற அமைப்பு நாட்டின் மருத்துவ ஆராய்ச்சியினை ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிட்ட நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டன. 1949 ஆம் ஆண்டில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையாக (ஐ.சி.எம்.ஆர்) மாற்றியமைக்கப்பட்டது.

இந்த பெருமைமிகு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நிறுவனத்தில்தான் தற்போது புராஜக்ட் ரிசர்ச் சயின்ஸ்டிஸ்ட், கன்சல்டன்ட் பணியிடங்கள் 2 காலியாகவுள்ளன. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இம்மாதம் 13-ம் தேதியாகும் (13.12.2023)இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Research Scientist I பணியிடத்துக்கு Graduate Degree (4 Years),
Consultant (IT) பணியடங்களுக்கு Graduate Degree (IT) படித்திருக்கவேண்டும். மேலும் 3 ஆண்டுகள் அனுபவமும் இருக்கவேண்டும்.

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
இந்த Project Research Scientist I பணிக்கு ரூ.56,000 மாத ஊதியமாகவும், Consultant (IT) பணிக்கு ரூ.44,450/- மாத ஊதியமாகவும் வழங்கப்படும்.

15.12.2023 அன்று காலை 10.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 13- ம் தேதிக்குள் (13.12.2023) அனுப்ப வேண்டும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Advt_for_AI4TB_dated_41223.pdf என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
ICMR-New Delhi, India, invites applications for Project Research Scientist Position from eligible and interested candidates.Deserving candidates may come for send Walk-in-Interview on 15/12/2023 along with 5 copies of their Bio-data. The candidates must reach before 10:30 AM on 15/12/2023. The Candidates willing to join online are requested to send their bio-data through email on or before 13/12/2023 at chalgams.hqicmr.gov.in. The verification of the documents of the candidate will start at 10.30AM and eligible candidates after verification would be admitted for Walk-in-Interview from 11:00 A.M. onwards on 15/12/2023.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+