மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.70 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- Manager (CA) - 01
- Manager (Legal) - 02
- Assistant Manager (Legal) - 02
- Assistant Manager IT (Hardware) - 02
- Assistant Manager IT (Software) - 03
கல்வித் தகுதி :
யுஜிசி அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.இ, பி.டெக், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
- மேலாளர் பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டும், பிற பணிகளுக்கு 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.63,840 முதல் ரூ.69,810 ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து The General Manager (Admin), Repco Bank Ltd, P.B.No.1449, Repco Tower, No:33, North Usman Road, T.Nagar, Chennai - 600 017 என்ற முகவரிக்கு 12.07.2021 க்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












