மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ரெப்கோ (REPCO) நிதி நிறுவன வங்கியில் காலியாக உள்ள இணை பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ரெப்கோ நிதி நிறுவனம் (REPCO)
பதவி : Deputy General Manager
கல்வித் தகுதி :
- யுஜிசி அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும், ACA /ICWA பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : மாதம் ரூ.1 லட்சம் ஊதியம் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்கயது விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : துணை பொது மேலாளர் (HR), ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், 3 வது மாடி, அலெக்சாண்டர் சதுக்கம், புதிய எண் 2 / பழைய எண் 34 & 35, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை - 600 032.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.repcohome.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












