CISF இன்ஸ்பெக்டர், டிரைவர் பணி அறிவிப்பு 2023
நவம்பர் 28 ஆம் தேதி வரை சி.ஐ.எஸ்.எஃப்.,ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cisfrectt.cisf.gov.in/ இல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 215 காலிப்பணியிடங்களுக்கு, ஆர்வம், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force)
மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்
v ஹெட் கான்ஸ்டபிள் ( Head CONSTABLE
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 215
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2023
கல்வி தகுதி
அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் வாயிலாக, 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் (equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதியாக ஏதாவது ஒரு விளையாட்டில் மாநில / தேசிய / சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தலைமை காவலர் பணிக்கு நிலை-4 படி மாதம் ரூ.25,500 - ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும்.
நோட் இட் ப்ளீஸ்....!
v இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.11.2023.. மறக்காதீங்க.... மறக்காதீங்க
வயது வரம்பு
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2023இன் படி வரம்பு 23க்கு மேலும், 18க்கு கீழும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இருப்பினும், சந்தேகங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
முக்கியம்
01/01/2021 to 28/11/2023 காலக்கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
Ø தேர்வு முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. முதல் நிலையில் உடற்தகுதி தேர்வு, தேர்ச்சி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் நிலை தேர்வு மேற்கொள்ளப்படும் ( Physical Standard Test/Proficiency, Trail Test)
Ø இரண்டாம் நிலையில், மருத்துவ பரிசோதனை தேர்வு நடக்கும்.
Ø விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும்.
Ø விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
Ø தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட், தேவையான கல்வி சான்றிதழ், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது. இப்பணியிடங்களுக்கு அக்டோபர் 30 முதல் விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications












