ரெபிட் நிறுவனத்தில் காத்திருக்கும் முதன்மை மேலாளர் வாய்ப்பு....!!!

இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும் ரிசர்வ் பேங்க் இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் என்று அழைக்கப்படும் ரெபிட் (REBIT) நிறுவனத்தில் முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான மற்றும் விருப்பமான நபர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம். பணியிடம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://rebithr.darwinbox.in/ms/candidate/careers/a658ed0a06c645 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியானது (Reserve Bank of India) 1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் மத்திய வங்கியாகும். இது 1949-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.

பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமையை (ஏஜண்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும்.

ரெபிட் நிறுவனத்தில் காத்திருக்கும் முதன்மை மேலாளர் வாய்ப்பு....!!!

ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது. இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது.

முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு. சக்திகாந்த தாஸ் பதவியில் உள்ளார்.

இந்த இந்திய ரிசர்வ் வங்கியால் அதன் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்புத் தேவைகளுக்காகவும், இந்திய வங்கிகளின் இணையத் தளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவும் ரெபிட் நிறுவனம் அமைக்கப்பட்டது.

ரெபிட் என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப பிரைவேட் லிமிடெட் (ReBIT) ஆனது, ரிசர்வ் வங்கி மற்றும் அதன் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புத் தேவைகள் உட்பட, தகவல் தொழில்நுட்பத் தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) முழு உரிமையுடனும் துணை நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.

ரெபிட்-ReBIT நிதித் துறையின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பில் (தொடர்புடைய ஆராய்ச்சி உட்பட) கவனம் செலுத்துகிறது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) நெறிமுறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் IT அமைப்புகளின் தணிக்கை மற்றும் மதிப்பீட்டில் உதவுகிறது.

மேலும், ரிசர்வ் வங்கியின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அவர்களின் செயல்பாடுகளின் IT பகுதிகளில் உள்ள ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டும் திறனைக் கொண்டுள்ளது.

இந்த பெருமைமிகு ரெபிட் நிறுவனத்தில்தான் தற்போது முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணியிடங்களுக்கன கல்வித்தகுதி:
முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இன்ஜினியரிங், மேனேஜ்மெண்ட் (Engineering, Management) பாடப்பிரிவில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (Bachelor's Degree அல்லது Master Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு முன் அனுபவம்:
முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு ஊதியம்:
இந்த முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

தேர்வு செய்யும் விதம்:

முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

முதன்மை மேலாளர் (Chief Manager / AVP - Project Management) பணிக்கு விண்ணப்பிக்கும் விதம்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி:

பணியிடம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற https://rebithr.darwinbox.in/ms/candidate/careers/a658ed0a06c645 என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Reserve Bank Information Technology Private Limited intends to engage the applicants for the position of Chief Manager / AVP – Project Management. Interested candidates should read the job details and apply for the post online. Interested and Eligible applicants may apply Online Through the Official Website rebit.org.in.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+