ஐடிஐ படித்தவர்களுக்கு கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் (RCF) வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ரயில் பெட்டித் தொழிற்சாலையில் டெக்னிக்கல் அப்ரென்டிஸ் (Technical Apprentices) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளன. மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://rcf.indianrailways.gov.in/uploads/files/act-app/act24-25.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.
ரயில் பெட்டித் தொழிற்சாலையில்தான் தற்போது டெக்னிக்கல் அப்ரென்டிஸ் (Technical Apprentices) பணியிடங்கள் 550 காலியாக உள்ளது.

டெக்னிக்கல் அப்ரென்டிஸ் (Technical Apprentices) கல்வி விவரம்:
இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
டெக்னிக்கல் அப்ரென்டிஸ் (Technical Apprentices) வயது விவரம்:
இந்த Technical Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 31.03.2024 அன்றைய தினத்தின் படி, 15 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Apprentices விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.
தேர்வு செய்யும் முறை: Technical Apprentices பணிக்கு பொருத்தமான நபர்கள் மெரிட் லிஸ்ட் (Merit List) என்னும் தேர்வு முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: இந்தப் பணிக்கு SC / ST / PWD / Women பிரிவினர் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற நபர்கள் - ரூ.100/- செலுத்தினால் போதுமானது.
விண்ணப்பிக்கும் வழிமுறை: இந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 09.04.2024 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இணையதள முகவரி:
மேலும் கூடுதல் விவரங்கள் பெற https://rcf.indianrailways.gov.in/uploads/files/act-app/act24-25.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












