RBI Recruitment 2020: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆர்பிஐ வங்கியில் பணியாற்ற ஆசையா?

நாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் முதன்மையானது ஆர்.பி.ஐ என்னும் இந்திய ரிசர்வ் வங்கி. தற்போது இவ்வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ' மற்றும் கிரேடு 'பி' பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிட

நாட்டில் செயல்பட்டு வரும் வங்கிகளில் முதன்மையானது ஆர்.பி.ஐ என்னும் இந்திய ரிசர்வ் வங்கி. தற்போது இவ்வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ' மற்றும் கிரேடு 'பி' பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

RBI Recruitment 2020: ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் ஆர்பிஐ வங்கியில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி (RBI)

மொத்த காலிப் பணியிடங்கள் : 17

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

  • Legal Officer in Grade 'B' - 01
  • மேலாளர் (தொழில்நுட்பம் - சிவில்) - 01
  • உதவி மேலாளர் (Rajbhasha) - 06
  • உதவி மேலாளர் (Protocol & Security) - 04
  • Library Professionals (Assistant Librarian) in Grade 'A' - 01

கல்வித் தகுதி : சட்டத்துறையில் பி.எல்., பட்டம் பெற்று 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளவர்கள், பொறியியலில் சிவில் துறையில் பி.இ., முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அல்லது,

இந்தி மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், இந்தியாவின் முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அதிகாரியாக பணியாற்றியவர்கள், கலை, அறிவியல், வணிகம் பிரிவில் பட்டம் பெற்று நூலக பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.12.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

கிரேடு 'ஏ' பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.28,150 முதல் ரூ.55,600 வரையில் ஊதியம் வழங்கப்படும்.
கிரேடு 'பி' பணியிடத்திற்கு ரூ.35,150 முதல் ரூ.62,400 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

RBI சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த பணியிடத்திற்கு பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

எஸ்.சி, எஸ்.டி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://opportunities.rbi.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 20.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
RBI Recruitment 2020 Notification Out: Apply For Grade A & Grade B Jobs opportunities.rbi.org
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+