Ranipet Private Job Fair 2023
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் (ராணிப்பேட்டை) மற்றும் THE GEEKAY WORLD SCHOOL இணைந்து நடத்தும், இந்த வேலைவாய்ப்பு முகாமில், 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளன.

10 ஆயிரம் இடங்களுக்கு ஆட்சேர்ப்பு முகாம் 2023
எங்கே....!
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேலைவாய்ப்பு முகாம் காலை 9.00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில் பங்கு பெறும் 200 முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன.
எட்டாம் வகுப்பு முதல் பி.இ., வரை
இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், வணிகம் மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.
சென்னை, வேலூர், செங்கல்பட்டு, கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியை சேர்ந்த நிறுவனங்கள் பங்குபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் பெறுவர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக, தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறும் பயனாளிகளின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது.
ப்ளீஸ் மறக்காதீங்க...!
நேர்காணல் மார்ச் 18 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கே துவங்குகிறது. சீக்கிரம் போங்க... ஆல் தி பெஸ்ட்...!
பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவரக் குறிப்புடன் (Biodata) ஆகியவற்றை நேர்காணலின் போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.
மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...
https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/352303070004
https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/352303070004


Click it and Unblock the Notifications












