புதுச்சேரி மின்சாரத் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 42 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.33 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : புதுச்சேரி மின்சாரத் துறை
பணி : இளநிலை பொறியாளர் (Junior Engineer)
மொத்த காலிப்பணியிடம் : 42
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிஇ, பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : மேற்கண்ட பணியிடத்திற்கு மாதம் ரூ.33,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://recruitment.py.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://recruitment.py.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள பக்கத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications

