புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் மதிப்பூதிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பப் படிவம் குறித்த விபரங்கள் கீழே உள்ளன.
நிர்வாகம் : மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை - புதுச்சேரி
பணியிடம் : புதுச்சேரி
பணிகள் : அங்கன்வாடி ஊழியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://wcd.py.gov.in/ என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Director, Department of Women and Child Development, Puducherry Housing Board Complex (Opp. LIC office), Saram, Puducherry-605013.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 03.12.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://wcd.py.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பு லிங்க்கை காணவும்.