மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (PGCIL) காலியாக உள்ள Diploma Trainee பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.17 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid - PGCIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Diploma Trainee
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல், சிவில் மற்றும் அது சார்ந்த பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.1,17,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.powergrid.in/ என்ற இணையதளம் மூலம் 08.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300
- எஸ்.சி, எஸ்டி, முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப்படிவத்தினை பெறவும் https://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும். அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












