Power Grid Junior officer Recruitment 2023: இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில் பயிற்சி ஜூனியர் ஆபீசர் பணி...!

மத்திய அரசு நிறுவனமான இந்திய பவர் கிரிட் நிறுவனத்தில், காலியாக உள்ள 46 பயிற்சி ஜூனியர் ஆபீசர்(ஹெச்.ஆர்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம்: இந்திய பவர் கிரிட் நிறுவனம்(Power Grid Corporation of India)

மேலாண்மை: மத்திய அரசு

பவர் கிரிட் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை..!

பதவிகள் விவரம்

Ø Junior Officer Trainee (HR)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (மே.30)

பணியிடங்கள் எண்ணிக்கை: 46

கல்வி தகுதி / வயது வரம்பு

பி.பி.ஏ., பி.பி.எம்., பி.பி.எஸ்., அல்லது அதற்கு இணையான பிரிவில், இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீதம் அளவுக்கு, மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை, டிப்ளமோ படித்தவர்கள் அல்லது இணையான உயர்க்கல்வி பெற்றவர்களும், இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 2022-2023 ஆம் ஆண்டு இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும். விண்ணப்பதார்கள் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்

தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, பயிற்சி காலத்தில் குறைந்தபட்சம் ரூ.27,500 வரை, மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட இதர சலுகைகளுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பயிற்சி காலம் முடிந்த பின்னர், ரூ.25,000 முதல் ரூ.1,17,500 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். ஆன்லைன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ப்ளீஸ் நோட் இட்...!

விண்ணப்பக் கட்டணம்

Junior Officer Trainee(HR) பணிக்கு விண்ணப்பிக்கும் பொது பிரிவினருக்கு ரூ.300 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

பழங்குடியின/பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் https://www.powergrid.in/ என்ற வலைதள பக்கத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பெயர், கல்வித்தகுதி, சுய விபரம் மற்றும் கோரப்படும் விபரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்படிவத்தில் மொபைல் எண், மின் அஞ்சல் முகவரியை மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

ரொம்ப முக்கியம்

மே.30 ஆம் தேதி கடைசி நாளாகும். மறக்காதீங்க.... அதாவது நாளை விண்ணப்பிக்க கடைசியாகும்.

https://www.powergrid.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக, அவ்வவ்போது அறிந்து கொள்ளலாம். காலிப் பணியிட அறிவிப்புகளை காண கீழே கிளிக் செய்யவும்...!

https://www.powergrid.in/job-opportunities

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.powergrid.in/sites/default/files/inline-files/Detailed_Advertisement_for_the_post_of_JOT_HR_2023.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
PGCIL Junior officer Recruitment 2023: Powergrid Corporation of India Limited, a central PSU with 'Maha Ratna' status, is recruiting for Junior officer Trainee(HR) vacancies. Interested youth can apply for 46 vacancies in the company.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+