மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்பிஏ, எம்.சிஏ படித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 325
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- மூத்த மேலாளர் : 106
- மேலாளர் : 99
- அதிகாரி : 120
கல்வித் தகுதி :-
மூத்த மேலாளர் : எம்பிஏ, எல்எல்பி (இளநிலை சட்டப்படிப்பு) பட்டய கணக்காளர் (சிஏ)
மேலாளர் : எம்பிஏ, எல்எல்பி (இளநிலை சட்டப்படிப்பு) பட்டய கணக்காளர் (சிஏ)
அதிகாரி : எம்சிஏ, (முதுகலை கணினி பயன்பாடு), பிஇ, பி.டெக்
வயது வரம்பு :-
மூத்த மேலாளர் : 25 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் : 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரி : 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :-
மூத்த மேலாளர் : ரூ. 42,020 முதல் ரூ.51,490 வரையில்
மேலாளர் : ரூ. 31,705 முதல் ரூ.45,950 வரையில்
அதிகாரி : ரூ. 23,700 முதல் ரூ.42,020 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1vksnRvmrkEX0ZbOmIqylcU8s4b2bAkOF/view
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.pnbindia.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :-
- பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 400
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம்- ரூ. 50
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.02.2019 தேதிக்குள்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.pnbindia.in/Recruitments.aspx அல்லது https://drive.google.com/file/d/1vksnRvmrkEX0ZbOmIqylcU8s4b2bAkOF/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












