மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலியாக உள்ள மூத்த மேலாளர், மேலாளர், மூத்த சட்ட மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு சிஏ, எம்பிஏ, சட்டம் படித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பஞ்சாப் நேஷனல் வங்கி
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 325
பணி மற்றும் காலிப் பணியிடம்:-
- மூத்த மேலாளர் (கடன்) - 51
- மேலாளர் (கடன்) - 26
- மூத்த மேலாளர் (சட்டம்) - 55
- மேலாளர் (சட்டம்) - 55
- மேலாளர் (எச்ஆர்டி) - 18
- அதிகாரி (ஐடி) - 120
கல்வித் தகுதி:-
ஒவ்வொரு பணி இடத்திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிஏ, ஐசிடபில்யுஏ, நிதியியல் துறையில் எம்பிஏ, அல்லது பிஜிடிஎம் முடித்தவர்கள், சட்டத்துறையில் இளங்கலை பட்டம், மனித மேலாண்மை, தனி மேலாண்மை, பொறியியல் துறையில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக், எம்சிஏ முடித்தவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :-
மூத்த மேலாளர் (கடன்) - 01.01.2019 தேதியின்படி 25 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் (கடன்) - 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மூத்த மேலாளர் (சட்டம்) - 01.01.2019 தேதியின்படி 28 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் (சட்டம்) - 01.01.2019 தேதியின்படி 25 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
மேலாளர் (எச்ஆர்டி) - 01.01.2019 தேதியின்படி 25 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அதிகாரி (ஐடி) - 01.01.2019 தேதியின்படி 21 முதல் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :-
மூத்த மேலாளர் (கடன்) - ரூ.42,020 முதல் ரூ.51,490 வரையில்
மேலாளர் (கடன்) - ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்
மூத்த மேலாளர் (சட்டம்) - ரூ.42,020 முதல் ரூ.51,490 வரையில்
மேலாளர் (சட்டம்) - ரூ.31,705 முதல் ரூ. 45,950 வரையில்
மேலாளர் (எச்ஆர்டி) - ரூ.31,705 முதல் ரூ. 45,950 வரையில்
அதிகாரி (ஐடி) - ரூ.23,700 முதல் ரூ.42,020 வரையில்
தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற பிரிவினர் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.03.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pnbindia.in என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












