மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.55 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : உதவி மேலாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 14
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலை, முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.28,150 முதல் ரூ.55,600 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://ibpsonline.ibps.in/pfrdarmaug21/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 16.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.800
- எஸ்.சி, எஸ்சி, பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.pfrda.org.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.