மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ONGC) காலியாக உள்ள Executive மற்றும் Non-Executive பணியிடங்களை நிரப்பிடுதவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 31 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஆண்டிற்கு ரூ.8.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Executive மற்றும் Non-Executive
மொத்த காலிப் பணியிடம் : 31
கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலை, பொறியியல், தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஒரு வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 28 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ஆண்டிற்கு ரூ.3.90 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 07.07.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகுத் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ongcindia.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












