ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் 422 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 2019 ஜனவரி 01 ஆகும்.

மொத்த காலியிடங்கள் : 422
நிறுவனம் : ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ஓஎன்ஜிசி)
வயது வரம்பு :
பல்வேறு பணி உள்ள நிலையில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 35 வயதிற்குட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வி மற்றும் இதரத் தகுதிகள் :
- மெக்கானிக்கல்
- எலக்ட்ரிக்கல்
- எலக்ட்ரானிக்ஸ்
- டெலிகாம்
- எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன்
- இன்ஸ்ட்ருமென்டேசன்
- பெட்ரோலியம்
- கெமிக்கல்
- ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் டிப்ளமோ பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- வேதியியல் முதுகலை முடித்தவர்கள் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டிங், மெஷினிங், தீயணைப்பு பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை : ஆக்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.ongcindia.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.370.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 01.01.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.ongcindia.com/wps/wcm/connect/03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d/detailed_04mumbai.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-03fabc8f-5287-44fd-bcef-4e619aa1c94d-mu6VfWS என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












