மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய எண்ணெய் நிறுவனத்தில் (Oil India) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.45 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய எண்ணெய் நிறுவனம் (OIL India Limited)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Graduate Engineer
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி : அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், 2 முதல் 4 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 22 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறையின் படி வயதில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.45,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பப் படிவத்தினை [email protected] எனும் மின்னஞ்ச முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் வழியிலான நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.oil-india.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












