மத்திய அரசு நிறுவனத்தில் அற்புதமான வேலை ரெடி...!!!

மத்திய அரசின் பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பி பயன்பெறலாம். கூடுதல் விபரங்களுக்கு oilexecutive.cbtexamportal.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும்.

இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் அற்புதமான வேலை ரெடி...!!!

9,000 ஊழியர்கள் கொண்ட இந்நிறுவனம் நவரத்தின மதிப்பைப் பெற்றதாகும். இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.

ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும். இந்த பெருமைவாய்ந்த மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில்தான் தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கு தற்போது மெடிக்கல் ஆபிசர் பிரிவில் 2, சூப்பரென்டன்ட் இன்ஜினியர் பிரிவில் 2, சீனியர் ஆபிசர் பிரிவில் (கெமிக்கல் 2, எலக்ட்ரிக்கல் 10, தீயணைப்பு 11), சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் பிரிவில் 11, சீனியர் ஆபிசர் பிரிவில் (மெக்கானிக்கல் 41, ஐ.டி., 3, இ.சி.இ., 6, பெட்ரோலியம் 5, எச்.ஆர்., 3), சீனியர் ஜியாலசிஸ்ட் பிரிவில் 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கான கல்வித்தகுதி:

இங்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதால் பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடும். எனவே, விண்ணப்பம் செய்வோர் oilexecutive.cbtexamportal.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொண்டு கல்வித்தகுதி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கான வயதுத்தகுதி:

29.1.2024 அடிப்படையில் பிரிவு வாரியாக மாறுபடும்.

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கான தேர்ச்சி முறை:

இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கான விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்தவேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

ஆயில் இந்தியா நிறுவன பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்ப கடைசிநாள்:
இந்தப் பணிகளுக்கு வரும் 29-ம் தேதி (29.1.2024) விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி:

கூடுதல் விபரங்களுக்கு oilexecutive.cbtexamportal.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து தகவலைப் பெற்றுக் கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
OIL India Limited has invited applications for Superintending Medical Officer, Senior Officer and other posts. The application process is underway and the deadline for submitting the application form is January 29. This recruitment drive is being conducted to fill 102 vacancies, of which 4 are for the Superintending Engineer, 97 are for the Senior Officer, and other posts. One vacancy is for a Confidential Secretary.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+