தேசிய அனல் மின் நிறுவனத்தில் (NTPC) காலியாக உள்ள அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.
என்.டி.பி.சி மின்சாரம் உற்பத்தி செய்யும் வணிகம் மற்றும் பிற ஒத்த செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அரசுக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில மின்சார வாரியங்களுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் அதை விற்பனை செய்வதும் முக்கிய வணிகமாகும். மேலும், என்டிபிசி( NTPC) எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது.

என்டிபிசி நிறுவனம், தற்போது, இந்தியாவில் 55 இடங்களிலும், பங்களாதேஷில் 2 இடங்களிலும், இலங்கையில் ஒரு இடத்திலும் இயங்குகிறது. மேலும் நாட்டில் எட்டு பிராந்திய தலைமையகங்களைக் கொண்டுள்ளது:
இந்த பெருமைமிகு தேசிய அனல் மின் நிறுவனத்தில்தான் (NTPC) தற்போது அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி இமமாதம் 23 (23.12.2023) ஆகும்.
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு கல்வி தகுதி
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு (Graduate Degree) முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு அனுபவத்தகுதி
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது பொதுத்துறை(PSU) நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் இ4/இ5(E4 / E5) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு வயது வரம்பு
இந்த என்டிபிசி(NTPC) நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 64 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
அசோசியேட் (Associate) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
23.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
விளம்பரம் தொடர்பான அறிவிப்புக்கு
https://careers.ntpc.co.in/recruitment/others//AG_23_Associate.pdf.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
கூடுதல் விவரங்களுக்கு https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.


Click it and Unblock the Notifications












