மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC) நிறுவனத்தில் காலியாக உள்ள Specialist (Solar) பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடம் : 22
பணி : Specialist (Solar)
கல்வித் தகுதி :
- அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் பட்டம் தேர்ச்சி பெற்று, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், பணியில் 18 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://open.ntpccareers.net/2021_solar_fte/index.php என்ற இணையதளம் மூலம் 17.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 17.09.2021என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications

