மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Mine Survey பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 08 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.24 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மைனிங் பொறியியல், டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : மத்திய அரசு
நிர்வாகம் : நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் (NTPC)
மொத்த காலிப் பணியிடம் : 08
காலிப் பணியிடம் : Mine Survey
கல்வித் தகுதி : மைனிங் சர்வே துறையில் பொறியியல், டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதியம் : ரூ.24,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட NTPC நிறுவனத்தில் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ntpccareers.net என்ற இணையதளம் மூலம் 12.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.12.2020 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ntpccareers.net அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.