இந்திய அணு மின்சார நிறுவனத்தில் (என்பிசிஐஎல்) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும், உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு npcilcareers.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.
இந்த சிறப்பு வாய்ந்த இந்திய அணு மின்சார நிறுவனத்தில் தான்(என்பிசிஐஎல்) தற்போது பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாவும், அதற்கு விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்:
தற்போது இங்கு ஸ்டைபன்ட்ரி டிரைய்னி / சயின்டிபிக் அசிஸ்டென்ட் டிப்ளமோ பிரிவில் மெக்கானிக்கல் 25, எலக்ட்ரிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 12, ஸ்டைபன்ட்ரி டிரைய்னி / சயின்டிபிக் அசிஸ்டென்ட் அறிவியல் பிரிவில் பி.எஸ்சி., இயற்பியல் 4 என மொத்தம் 53 இடங்கள் உள்ளன.
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் டிப்ளமோ, பி.எஸ்சி., முடித்திருக்க வேண்டும்.
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கான வயது விவரம்: 14.2.2024 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை:
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய முறைகளில் ஆட்கள் சேர்ப்பு நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை:
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கு ரூ. 150-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்தவேண்டும். பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை.
கடைசிநாள்:
என்பிசிஐஎல் பணியிடங்களுக்கு வரும் 14.2.2024 மாலை 4:00 மணிக்கு விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
இணையதள முகவரி:
கூடுதல் விவரங்களுக்கு npcilcareers.co.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.


Click it and Unblock the Notifications












