மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள Trade Apprentice பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 173 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய அணுசக்தி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் (NPCIL)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Trade Apprentice
காலிப் பணியிடங்கள் : 173
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 18 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,855 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://apprenticeshipindia.org/ எனும் இணையதளத்தின் மூலம் 16.08.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.npcil.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












