தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு, 2,222 பேர் நேரடி நியமனம் செய்யப்படுவர் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களும், தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளன.

எத்தனை பணியிடங்கள்
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு, 2,222 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கு நவம்பர் 1 முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும்.
தகுதி என்ன?
தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல, தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில்( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper - II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பணியிடங்கள் எண்ணிக்கை
தமிழ் பாடம் - 371 பணியிடங்கள்,
ஆங்கிலப் பாடம் - 214 பணியிடங்கள்,
கணிதப் பாடம் - 200 பணியிடங்கள்,
இயற்பியல் பாடம் - 274 பணியிடங்கள்,
வேதியியல் பாடம் - 273 பணியிடங்கள்,
வரலாறு பாடம் - 346 பணியிடங்கள் உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
எவ்வளவு ஊதியம் தெரியும்?
தேர்வாகும் ஆசிரியர்கள் மாதம் ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை ஊதியம் பெறுவர்.
எங்கெங்கு காலியிடங்கள்
* பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் - 2.171
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம் - 23
* ஆதிதிராவிடர் நலத்துறை - 16
* மாற்றுத் திறனாளிகள் நலத்துறை - 12
வயது
பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
கட்டாய தமிழ் மொழித் தேர்வு
தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு
150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு குறித்த இதர விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












